இளவேனிற்காலத்து கவிதைகள் - 1

என்றோ

ஒரு காலைப் பொழுதில்
லௌகீகப் புரிதல் அற்ற
கன்றுகளாய்
திரிந்த வேளையில்
பூச்செறிகிற கொடி மரத்தின்
கீழ் சந்தித்தோம்.

சில பந்தங்கள்
இரயில் சிநேகங்கள்
சில
இரயில் தடம்
மானுடத்திற்கு உணர்த்துகிற
சத்தங்கள்.

மானுட அலைவரிசைக் கெட்டாத
மனத்தின்
சந்தங்களினால்
இருவரும்
பிணைக்கப்பட்டோம்.

எத்தனையோ பிறவிகளாய்
நம்முள்
பிரவாகித்து ஓடி
யுகசந்திகளால்
தடைப்பட்டிருந்த
ஒரு
மெல்லிய ஓடை
மீண்டும்
நம்முள்
பிரவாகித்து
ஓடத் தொடங்கியது..

நாம் ஒன்றாய் கழித்த
அந்த நாட்கள்...

உண்டு, உறங்கி,
ஒருவருக்கொருவர்
தோள் கொடுத்து

வலி மறந்து
வாழக் கற்ற
அந்த கணங்கள்...

இன்று
நினைவுகளின் சிறையாய்
ஞாபகக் குழிகளுக்குள்...
நினைக்கிற போது தித்திப்பதற்காய்...

இனிமேல் வராத அந்த காலங்களுக்காக
நாம் இருவரும் சொல்லிக்கொள்வோம்
ஆயிரமாயிரம் நன்றிகள்..

உனக்கோ எனக்கோ அல்ல
நம் இருவரையும்
ஆள்கிற அந்த நட்புக்காக....

Comments

Paleo God said…
:) நல்லா இருக்கு. தமிலிஷ் லயும் இணைச்சிடுங்க.:)

பின் தொடர்பவர்கள்