ஏதிலிகளின் சொற்கள்

ஏதிலிகளின் சொற்கள் 

அம்பலம் ஏறுவதில்லை

உயிர் விதிர்க்க பயிர் விளைவித்தாலும்

நொய்யிற் பிளவளவேனும் பயனில்லை

முற்றத்தில் நெற்கொத்தும் சாம்பற்குருவிகளும் கூட

சாளரம் திறப்பின்

சிதறி ஓடும்

மின்னற் சூல் கொண்ட 

மஞ்சுப் பொதிகளில்

எப்பொழுதெனினும் பேரிரைச்சல்தான்

சிறிதேனும் 

இந்த உலகத்துக்கு அப்பால்

உயரப் பறக்க வேணும்

அலையாழி அரிதுயிலும் அகண்ட வெளிக்கப்பால்

எனக்கான மைல்கல் 

ஏதேனும் ஓர் உருவில் இருக்கக் கூடும்

Comments

பின் தொடர்பவர்கள்