காதல் செய்வீர் உலகத்தீரே!!

காதல்...

பிரபஞ்சத்தின் உணர்வு...

இந்த பிரபஞ்சமும் மனித நாகரிகமும் உயிர்ப்புடன் இருக்க காதல்தான் காய் நகர்த்துகிறது...

மனித நாகரிகம் உண்டான காலத்திலிருந்து, அதை தழைக்க வைக்க உருவான ஒற்றை உணர்ச்சி இது. இந்த நொடி வரை யாரையுமே காதலிக்காத ஒருவன் இந்த உலகத்தில் இல்லை என்று அடித்துக் கூறலாம்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் இந்த காதலின் வேர்கள் பின்னிப் பாய்ந்திருக்கின்றன. மூச்சை காதலிக்காவிடில் மனிதன் பிணம். பேச்சையும் உணர்ச்சியையும் காதலிக்காவிடில் மனிதன் ஜடம். ஏதோ ஒன்றை ஒவ்வொரு கணமும் காதலிக்கிறோம்.

ஒவ்வொருவனும் அவனவன் தேவதையை நேரில் காணவைக்கிற சூத்திரதாரி இந்த காதல் தான்..

ஒவ்வொரு வீரனுக்குள்ளும் ஒரு உடைந்து போன காதல் இருக்குமாம். வீரனுக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு மனிதனுக்குமானது இது.

வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும்போது கூட சுகத்தை எதிர்பார்க்கிற மனிதன் வாழும்போதே விரும்பி எடுத்துக்கொள்கிற இரணம் இந்த காதல்.

காதல்
மரணத்தின் வலிக்குள்
ஒரு
மகிழம்பூ தேடல்..

தன்னை காதலிக்க, தன்னை இரசிக்க ஒருத்தியோ ஒருவனோ இருக்கிறார் என்ற உணர்வுதான் ஒவ்வொரு மனிதனையும் ஆயிரம் கால் பாய்ச்சலுடன் முன்னே ஓட வைக்கிறது. சிரிக்க வைக்கிறது. உணர்வுகளுடன் உரையாட வைக்கிறது.

கண்ணனையே காதலித்து, கண்ணனையே கரம் பிடித்த ஆண்டாள் ஆகட்டும், கண்ணனையே நினைத்து உருகிய மீராவாகட்டும், இன்றைய தலைமுறை மனிதர்களாகட்டும். எல்லாருக்குமான ஒரே உணர்வு இது.

மனிதனை மனிதனாய் உணரவைக்கிறது காதல்...
மனிதனை தெய்வமாய் உயர்த்துகிறது காதல்..

செங்குருதி பொங்க சாட்டையடி அடிக்கிறது
சிறகுகளைக்கொண்டு சாமரமும் வீசுகிறது

காதல் விசித்திர அனுபவம்...

'ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!!!'

காதலர் தின நல்வாழ்த்துக்கள்...

Comments

Paleo God said…
வாங்க வாங்க ..:))
Paleo God said…
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!!!'//

ரைட்டு..

அப்ப நீங்க??
நமக்கு இப்படி எழுதி சந்தோசப்பட்டுகிட்டாதான் உண்டு...

இந்த வருசமாவது ஏதாவது அமையுதானு பாப்போம்..... ;)
Anonymous said…
all the very best :)

பின் தொடர்பவர்கள்