மரமும் காகிதமும்

எல்லாவிடத்தும் காகித மனிதர்கள் அலைகிறார்கள். காற்றடித்தால் உடைந்துவிடுகிற மனிதர்கள். புயலடித்தால் பறந்துவிடுகிறார்கள். இல்லை பறக்க முனைகிறார்கள். அவர்கள் காகிதத்தால் ஆனவர்கள். அப்படித்தான் இருப்பார்கள் எனவும் விடமுடியவில்லை மரத்தால் ஆன மனிதர்களால். மரமாய் இருப்பதைக் காட்டிலும் காகிதமாய் இருப்பதுதான் நிறைய பேருக்கு வாய்க்கிறது. எஞ்சிய சில காகித மனிதர்கள் மர நிறத்தை மேலப்பிக் கொண்டு தன்னை ஒரு மரமென காட்டிக் கொண்டே அலைகிறார்கள். இந்த வேஷம் ஒவ்வாதென அவர்களுக்குத் தெரியுமா?

யாரோ எவரோ என போய்விட முடியவில்லை. எல்லாம் இழந்ததாய் அழும்போதும் கூட வாழ்ந்து தீர்க்க வாழ்க்கை கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. வாழத்தான் வேண்டியிருக்கிறதா இல்லை வாழ வேண்டுமா என்பது மனிதர்களின் மனதில்தான் இருக்கிறது. காகித மனிதர்கள் முன்னது மாதிரி நினைக்கின்றனர், மரப்பாச்சிகள் பின்னது மாதிரி நினைக்கிறார்கள்.

எந்த வெள்ளமும் மடை திறந்த கொஞ்ச நேரம்தான். சிறிது நேரத்தில் வெள்ளம் அடங்கிவிடும். காகிதங்களை வெள்ளம் கரைத்து விடுகிறது. மரங்களை அல்ல.

இறுதியில் ஒன்று.

மரங்கள்தான் காகிதங்களாக மாறுகின்றன. காகிதங்கள் மரங்களாக அல்ல. 

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்