எதற்குமே நான் தலைப்புகள் கொடுப்பதில்லை. ஒரு வகையான escapism இது. ஆனால் தலைப்பில்லாமல் எழுதுவதோ இல்லை எழுதியவைக்கு தலைப்புகள் கொடுக்காமல் எழுதுவதில் ஒரு வகையான சுதந்திரம் இருக்கிறது. எந்த ஒரு பொறுப்புகளுக்குள்ளும் சிக்க வேண்டியதில்லை. எழுதுபவனுக்கு அதைவிட பெரியதொரு சுதந்திரம் வேறெவ்வாறு கிடைத்துவிடப் போகிறது?

எழுத்து என்பது பெருமழைப் போல. சில சமயம் பருவகாலம் தவறாது பெய்யும். சில சமயம் பொய்த்தும் போகும். தாளெல்லாம் வெள்ளைப் படிந்து வறண்டும் கிடக்கும், வற்றிப் போய் சுடுமணலோடும் ஜீவ நதியைப் போல.

Comments

பின் தொடர்பவர்கள்