தலையெழுத்து

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல. ஒட்டுமொத்த திமுகவின், அடிமட்ட தொண்டர்களின் இத்தனை வருட உழைப்பும் அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பலம் படைத்தவனாயினும் மரணம் விடுவதில்லை. மூப்பும் மரணமும் ஒரு நெருப்பு போல. தன் வழி கண்ட அனைத்தையும் விழுங்கி செரித்துவிட்டு சென்றுவிடுகிறது.

எனக்குத் தெரிந்து அதிமுகவுக்கு நிகழ்ந்த அதே கதிதான் திமுகவுக்கும் நடக்கும். முன்னதில் எ.ப.சவும் ஓ.ப.சவும். இதில் அழகிரியும் மு.க.ஸ்டாலினும்.

அவர் இருக்கும்போதே தொண்டர்படையினர் இரங்கல் அஞ்சலி பதாகைகளை அடித்துவைத்துவிட்டனர். இப்போது அவற்றை என்ன செய்வதெனத் தெரியாமல் ஒவ்வொரு முட்டுச் சந்திலும் ஒளித்துவைக்கின்றார்கள்.  தலையெழுத்து!

எல்லாக்காலங்களிலும் யாராவது ஒருத்தரை திருப்திப் படுத்துவதிலேயே நம்மவர்களின் காலமெல்லாம் தொலைந்துபோகிறது. வெள்ளைக்காரன் கொண்டுவந்த பழக்கமெனவோ, மெக்காலே கல்வித்திட்டமெனவோ இதையெல்லாம் வகைப்படுத்திவிட முடியாது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆண்டான் அடிமை மனோபாவத்திலிருந்து முளைவிட்டது இதெல்லாம். இப்பொழுது எவ்வளவு வீராப்பாய் நான் இதை தட்டச்சிக்கொண்டிருந்தாலும், என்னுடைய ஆழ்மனதிலும் அபப்டி ஒன்று இருக்கும் என்பதுதான் நிதர்சனம்.

நேற்று, பிரியாணிக்கு அடித்துக் கொண்டார்கள் என செய்தி வந்தது. என்ன இழவோ!

Comments

bandhu said…
so true! every word.
goms said…
Atlast his soul rest in peace

பின் தொடர்பவர்கள்