நான் தொடர்ச்சியாக எழுதுபவன் அல்லன். எனக்கு அப்படி எழுதவும் வராது. எழுதுவதற்கு என்று தனியாக ஒரு விஷயம் எனக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. அவ்வளவு கற்பனை சக்தியும் எனக்கு இல்லை. நிகழ்காலத்தின் தருணங்களை வாழ்பவனுக்கு அதெப்படி தோன்றும். வரும் கனவுகள் கூட விடியும்போதில் மறந்து விடும்போது அதை எப்படி ஒரு எழுத்தின் கருவாக எதிர்பார்க்கமுடியும்?

சரி இங்கு கிறுக்க எதாவது ஒரு விஷயம் வேண்டுமே? அதற்காகவாவது சுற்றி நடப்பதையெல்லாம் கொஞ்சம் உற்று கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. எது எக்கேடு கெட்டுப் போனால் என்னவென்று இருக்க முடியவில்லை. ஒரு மூன்றாவது மனிதனாகவாவது சுற்றி இருக்கும் உலகத்தினுடனான தொடர்பை புதுப்பித்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் எழுதுவது என்பது சாமானியமான விஷயமாகப் படவில்லை. அதற்கு ஏதாவது ஒரு விஷயத்திலாவது நிபுணத்துவம் தேவைப்படுகிறது. கொஞ்சம் நம் அளவையும் மீறி படிக்கவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது. சமயங்களில் இன்னார் இந்த இடத்தில் இப்படி சொல்லி இருக்கிறார். ஏதோ ஒருவர் ஏதோ ஒரு இடத்தில் இப்படி எடுத்தாளுகிறார் என்று சொல்வதற்காகவாவது இந்த படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் விஷயானுபவம் இல்லாமல் எழுதப்படுகிற எழுத்து ஏதோ ஒரு விதத்தில் தன் சோபனத்தை இழந்துவிடுகிறது.

இதையெல்லாம் தாண்டி எதாவது ஒரு விஷயம் கிடைத்தாலும் அதை சொல்கிற தன்மை வேறு இருக்கிறது. படிக்கிறவனுக்கு அலுக்காமல் இருக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட criteriaக்களை ஒரு பத்தி எழுதுவதற்காக நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு கஷ்டம் இங்கே இருக்கிறபோது நான் என்னத்தை எழுத?

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்