அன்று எம் கண்கள்

எங்கோ தேடின

அது கிட்டாதெனினும்


அன்று எம் கைகள்எ

எதற்கோ விரிந்தன

அது கிட்டாதெனினும்


அன்று எம் நா

எதையோ விளித்தது

அது கிட்டாதெனினும்


அன்று எம் கால்கள்

எங்கோ 

எதற்கோ

எதையோ தேடி

நகர்ந்தன

அது கிட்டாதெனினும்


அது கிட்டாதெனினும் சரி

தேடியோ

விரிந்தோ

விளித்தோ

நகர்ந்தோ

இருந்தோம்

உயிர்த்தாவது.

Comments

பின் தொடர்பவர்கள்