பூமியின் மணம்

இன்று புதிதாய்ப் பிறந்த
இந்த பூமிக்குள்
ஆயிரம் மணங்கள்

நேற்றைய பிரளயத்தின்
வெப்பம் மறைத்து
கதகதப்பை ஒளித்திருக்கிறது
இந்த உலகம்

சில மடிப்புகளில்
ஈரத்தின் வாசனை

சில மடிப்புகளில்
இறைச்சியின் வாடை

பூக்கள் மணம் கலந்த
நாற்றம் ஒரு புறம்
பிரளயத்தின் வெப்பத்தில்
அமிழ்ந்து ஆறிப்போன
ஆன்மாக்களின் வாடை மறுபுறம்


இத்தனை வாசனைகளோடும்
ஊடாடுகிறது
படைத்துக் களைத்த அவனின்
வியர்வை மணமும்!

Comments

பத்மா said…
ஹ்ம்ம் நல்ல இருக்குங்க
இறைவனுக்கே வேர்க்க வெச்சுடீங்க
ஒரு வேளை அவர் சென்னை வெயில்ல இருக்காரோ?

நல்ல கவிதை நாளை போவான்
ஒரு களி மண்ணுல பொம்மை செய்யறதுக்கே நமக்கு தாவு தீர்ந்து போகுதே! இவ்ளோ பெரிய உலகத்தை படைச்ச அவனுக்கு குறைஞ்சது வியர்க்கக் கூடவா செய்திருக்காது??? ;)

நன்றி பத்மா!! :)

பின் தொடர்பவர்கள்