உன்னிலும் அழகாய்! .

அதிகாலையில்
நீ இட்ட கோலத்தினின்று
உயிர்த்து ஓடின
அன்னபட்சிகள்
சில

மேகச் சாரல்களில்
மூழ்கி எழுந்து
தலை சிலிர்த்தாய்
வானம் சிலிர்த்துப் பொழிந்தது
வைர மழை

உணவென சமைத்து வைத்தாய்
ஒவ்வொரு அரிசியும் அமிழ்தமானது

எதற்காக வெளியே நின்று
தொழுகிறாய்
உள்ளே செல்
நாங்கள் உன்னைத் தொழுகிறோம்!
பேசும் தெய்வத்தைப் பார்க்க
எங்களுக்கும் ஆசைதான்!

மரங்களும் கொடிகளும்
நடனமாடுகின்றன
நீ
நடந்து வரும் தாளத்திற்கேற்ப!

என்ன என்னவோ
ஏதேதோ செய்கிறாய்
நீயே அறியாதபடிக்கு
அவை
உன்னிலும்
அழகாகின்றன!

Comments

nalla kavithai.
vaazhthukkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/
electraspider said…
கிறங்கடிக்கும் வரிகள் :))))
பத்மா said…
அட காதல் வழிகிறது ...
காற்றில் படர்கிறது
அருமை நண்பா
நன்றி முல்லை அமுதன்,
நன்றி electraspider,
நன்றி பத்மா!


:-))
Unknown said…
அழகானவை குறித்த அழகானக் கவிதையிது!
Brindha said…
Azhagana title :)
goma said…
அழகுக்கு அழகு செய்து விட்டீர்கள்

Popular Posts

பின் தொடர்பவர்கள்