தூஉம் மழை!

நிலா மழை
மழை நிலா
இரண்டுமே அழகு
ஒவ்வொரு மழைத்துளியும்
தாங்கிச் செல்கிறது
ஒரு நிலவை
விண் சிதறி மண் வீழ்கையில்
முளைத்தெழும்
அமானுஷ்யங்கள்
ஆற்றங்கரைப் புற்களால்
கழுவப்படுகின்றன
மழை நிலா
நிலா மழை
இரண்டுமே அழகு!

Comments

அழகான, எளிமையான கவிதை அருமை...
உங்கள் கவிதையும் அழகு தான் நண்பா..
நன்றி கருன்!

நன்றி சௌந்தர்!

:-)

பின் தொடர்பவர்கள்