நிராகரிப்பின் நிறம்

ஆயிரமாயிரம் அழுக்கு முகமூடிகளை
பூண்டிருக்கிறேன் நான்
உங்களைப் போல அல்லாமல்
ஒரு துர்நாற்றம் வீசும்
என்னிடம்
நின்ற இடத்தில் இருந்து
இருந்த இடத்தில் கிடந்து
கிடந்த இடத்தில் மடிந்தும் போகிற
வாழ்க்கை எனது
எப்போதும்
ஆறடி நிலத்தைத் தவிர
வேறெதுவும் தேவைப்பட்டதில்லை
மண்ணில் புரள்வது எனக்கு பிடித்திருக்கிறது
மலத்தில் தோய்வது
எனக்கும் பிடித்தமில்லையெனினும்
அதுமட்டும்தான் வாய்க்கிறது
அதனாலேயே என்னைக் கண்டதும்
நீங்கள் வாயிலெடுக்கிறீர்கள்
என் நிறம்
மஞ்சள்
அது உங்களை இன்னமும்
உமிழச் செய்கிறது
நிராகரிப்பின் நிறத்தை
மஞ்சள் எனப்
பதிவு செய்கிறீர்கள் நீங்கள்
என்னை நிராகரிக்க
உங்களுக்கு ஆயிரம் காரணம் வேண்டும்
ஆயினும்
உங்களை நேசிக்க
எனக்கு ஒரு காரணமும் வேண்டாம்!

Comments

Anonymous said…
வணக்கம்
கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

ஒருமாதம் கவிதைப்போட்டி நடைபெற்றது இறுதி வெற்றியாளர்களின் விபரம் வாருங்கள்.... வாருங்கள் அன்புடன்
http://2008rupan.wordpress.com/2013/11/13/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-2/

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பின் தொடர்பவர்கள்