போதும்

ஒரு கிடார்
ஒரே ஒரு புத்தகம்
நீல வானம்
இது போதும்
எனக்கு
பல நூறு வருடங்கள்
இப்படி சுற்றி வருகிற
அந்த
சிங்காரக் கிழவனைப் பார்க்கும்போது மட்டும்
வயிற்றெரிச்சலாய் இருக்கிறது

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்