பெயரில்லாக் கவிதை

காலை நேரத்து
தெருப்புழுதிகளை
இறைத்துவிட்டு செல்கிறது
காற்று

போகிற சிறுவர்கள்
கல்லெறிந்து பார்க்கிறார்கள்
சிலர்
கிளைபிடித்து
தொங்கிச் செல்கின்றனர்.

பனிரெண்டு மணி நேரத்துடன்
தன் சேவையை
முடித்துக் கொள்கிறது
சூரியன்.

இத்தனை யுகங்களும்
ஒரேவிதமாய்
பூக்கள் உதிர்க்கிறது
இந்த மரம்
நட்டுவிட்டு சென்ற
அசோகருக்கும்...
நடந்து செல்கின்ற
மனிதர்களுக்கும்...

Comments

Paleo God said…
//இத்தனை யுகங்களும்
ஒரேவிதமாய்
பூக்கள் உதிர்க்கிறது
இந்த மரம்
நட்டுவிட்டு சென்ற
அசோகருக்கும்...
நடந்து செல்கின்ற
மனிதர்களுக்கும்.//

நல்ல பார்வை! ரசித்தேன் நண்பா!

பின் தொடர்பவர்கள்