என் தேவதை

ஒவ்வொரு இரவிலும்
பிறந்து
காலையில் மரிக்கிறாள்
என் தேவதை.

கருப்பு அங்கியில்
ஒற்றை குடுவையுடன்
அவள் அங்கும் இங்கும்
ஓடி
உயிர்ப்பை
உணர்த்துகிறாள்

எனக்கும் அவளுக்குமான
காலம்
ஒலியில்லாமலேயே
கரைகிறது.

சூரியன்
உதிக்கிற தருணத்தில்
மின்னல் மறைகிற
பிரபஞ்சத்தினூடே
தானும்
ஒரு புள்ளியாய்
முற்றிலும் கரைகிறாள்
என் தேவதை
எனக்கான காலத்தையும்
கைக்கொண்டு..

Comments

இன்று அவள் அதிக பட்ச ஒளியுடன் இருப்பது போல் தெரிகிறது தோழர் ...

Popular Posts

பின் தொடர்பவர்கள்