பெயர் இழந்த பறவையின் காதல்...

பல கோடி பல கோடி பயிரில் ஒன்றாய்
பச்சை நிற வெளியினிலே யான் பிறந்திருந்தேன்!
மலர்போல விளங்கு நற் பரிதிக் காடாய்
மனங்கரைய மஞ்சுவிடை ஜொலித்திருந்தாய்!

மனங்குளிரும் மதியென வுனை நினைத்திருந்தேன்!
மலரொளியாம் வதனமதை மகிழ்ந்திருந்தேன்!
பண்பொழியும் நின் முகத்தைத் தேடித் தேடி
பார்முடியும் எல்லைவரைப் பறந்துவந்தேன்!

அனல்போல நீயென்னைச் சுட்டதென்ன?
அண்டத்தின் வெறுமைதனைத் தந்ததென்ன?
சுற்றத்தார் எல்லோரும் சூழ நின்றும்
சுடுகாட்டில் வாழ்ந்ததைப்போல் கொண்டதென்ன?

மனம் லயித்த வெளியதனில் உன் சோதி பிம்பம்!
கணம் மறந்த வேளையில் உன் கண்கள் பேசும்!
நிலைமறந்த நிலையிலும்  உன் நிஜத்தின் வாசம்!
நிஜம் மறையும் வேளையிலும் உன் நினைவு வாழும்!

Comments

பத்மா said…
படிக்க இனிமையாய் இருக்கு ..
கருத்து வருத்தமாய் இருக்கு ..
எதற்கு பெயரை இழக்கணும்?
Ravishna said…
nice to read dude....

பின் தொடர்பவர்கள்