ஓர் பிரபஞ்சக் கவிதை

காலப் பிரக்ஞை
அற்றுப் போனதான சந்திகளில்
ஜனிக்கின்றன
எனதான எழுத்துக்கள்
நிசிக்கும்
யாமத்திற்கும்
இடையிலான வெளிகளில்
கால்படாமல் அவை
சஞ்சரிக்கின்றன
யாமம் அழிந்த கருக்கலில்
மீள்பிறக்கையில்
எதிர்படும்
எல்லாக் கண்களிலும் தெரிகிறது
ஓர் பிரபஞ்சக் கவிதை..

Comments

பத்மா said…
காண்பதெல்லாம் கவிதையாய் காணும் கண்கள்

பின் தொடர்பவர்கள்