காலசர்ப்பமும் தவளையும்

ஒரு
தவளையின் வாழ்க்கை
நம்முடையது
ஒவ்வொரு கணமும்
பிரபஞ்சப் புற்றுக்குள்
ஒளிகிற
கால சர்ப்பத்தால்
அது
விழுங்கப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாய்
விலகி ஓடி
தாவிக் குதித்து
தப்பிக்க முயற்சிக்கிறது
தவளை.
ஒவ்வொரு கணமும்
புதிதாய் பிறக்கிற
மற்றொரு சர்ப்பம்
அதை
விழுங்கிக்கொண்டிருக்கிறது..

Comments

கவிதை இயல்பாயிருக்கிறது பாராட்டுக்கள்,
Paleo God said…
ஜீரணத்திற்கான முழுமை வரையில்
காரணமில்லாத விழுங்கள்கள்..

ஓக்கே..:))
நன்றி ராஜாராம்...

நன்றி கருணாகரசு..

நன்றி ஷங்கர்..

பின் தொடர்பவர்கள்