குப்பைமேடு - 1

சில விஷயங்கள் என்றுமே மறப்பதில்லை. சோகமோ துக்கமோ நடந்தவுடன் அவை மட்டும் அப்படியே மனதில் அப்பி விடுகின்றன. மீண்டும் அவற்றை விட்டு வெளியே வருவதற்கு ரொம்பவும் பிரயத்தனப் படவேண்டியிருக்கிறது.
ஒரு மழை சிதறிய நாளில் குடையில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தபோது என்னைப் பார்த்து சிரித்துவிட்டு கடந்து போன ஒரு சின்ன பெண், மதிய உச்சி வெயில் நேரத்தில் நடுரோட்டில் வாங்கித்தின்ற ஐஸின் சுவை, தர்மபுரியில் இருந்த போது அங்கு பார்த்த  புன்னை மரங்களும், அதில் ஆடிய ஊஞ்சல் கயிறும், இப்படி சின்ன சின்னதாய் நிறைய ஞாபங்கள்.. After all நாம் எல்லாம் நினைவுகளின் குப்பைகள்தானே! ஒரு பாட்டில் வருவது போல கனவுகள் வாழும் பை. அவ்வளவே..

நினைவுகள் - அப்ரிசியேட் செய்யப்பட வேண்டிய ஒரு மெக்கானிசம். இதற்காக கடவுளுக்கு ஒரு  salute. நினைவுகள் என்ற ஒன்று தான் நம்மை யார் என இனம் காண வைக்கிறது. இந்த மானுடப் பிரவாகத்தை ஒரு உயிர்ப்புடன் ஓட வைக்கிறது. நினைவுகள் இல்லையெனில் ஒவ்வொரு கணமும் புதிதாய்விரியும். அதில் சிக்கி ஒவ்வொரு கணமும் தொலைந்து போவான் மனிதன்.

நினைவுகள் எப்படியாயினும் சரி. அவை ஒரு fantasy. நம்மை ஒரே நொடியில் நிகழ்காலத்துக்கும் அழைத்துச் செல்கிறது. அது வரை பார்த்தே இராத எதிர்காலத்துக்கும் இழுத்துச் செல்கிறது. மூளைக்குள் இருக்கிற ஆயிரமாயிரம் சிக்கலான சர்க்யூட்களில் இதற்கான சர்க்யூட் மட்டும் எப்படி இருக்கும்? இதையெல்லாம் வடிவமைத்த அந்த விஞ்ஞானி எப்படி இருப்பான்? அவனுடைய மூளைக்குள்ளும் இந்த விஷயங்கள் எல்லாம் இருக்குமா? அவன் மனிதனாக இருப்பானா? இல்லை மனிதனைப் போல ஒரு பிறவியா? அதான் உலகத்தில் தினம் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப் படுகிறதே. அது போல அவனும் ஏதோ ஒரு மூலையில் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாமல் ஒளிந்து கொண்டிருக்கிறான் போலும்.

Comments

Paleo God said…
மனுஷனாவே யோசிக்கறதுதான் பிரச்சனையே..:)

--

Keep Writing..!
நெசந்தான் ஷங்கர்... யோசனையே இல்லாமல், பாரதி சொல்ற மாதிரி ஒரு நசையறு மதி கெடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்? :)

Popular Posts

பின் தொடர்பவர்கள்