இளவேனிற்காலத்துக் கவிதைகள் - 2



ஒரு நரை முதிர்ந்த
மரத்தின் கீழ்
நம் ஜாகை.

புரியாத கதைகள் பேசி
மானுடப்பெருக்கத்தின்
புதிர் கதைகளை
பரிமாறிக்கொண்டோம்
அவை தவறென்று
கருதப்படப் போகிற
சூட்சுமம் புரியாமல்.

உடல் உரசுதல்
அநாகரிகமாய்
உணரப்படுகிற
தருணங்கள் நம்மிடையே
அவ்வேளை கண்டதில்லை.

ஒருவருக்கொருவர்
ஞான போதகனாய்
இருந்த காலத்தில்
இந்த மரம்
மௌனசாட்சியாய்
நின்று
இரசித்துக் கொண்டிருந்தது
தானும்
களங்கப்படப் போகிற
விதியறியாமல்...

Comments

Paleo God said…
நீர் கலக்குமைய்யா..:))
Nandri shankar.:) Ellam neenga kodukara thairiyam than :)
Unknown said…
நல்லா இருக்கு கவிதை
ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.
நன்றிங்க ராஜாராம்.... :)
ஏனுங்க, எல்லாரும் நல்லாருக்குன்னு பாராட்டித் தள்ளுறாங்க. என்னடா இப்படிச் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. அந்த மரத்துப் படம் நல்லாயிருக்கு. ஆனா கவிதை புரிபடமாட்டேங்குது. //ஞான போதகனாய்// அப்படின்னா இதுல இருக்க ரெண்டு பேரும் ஆம்பளைங்களா? எனக்கு ஓரினச் சேர்க்கைக் காரர்களைப் பற்றிப் பிரச்சினை ஒன்றும் கிடையாது பாஸு:)) //தானும்
களங்கப்படப் போகிற
விதியறியாமல்.// அப்படின்னா சுற்றுப்புறச்சூழல் பாதிப்பைப் பத்திப் பேசுறீங்களா? உங்களோட இந்தக் கவிதையை எனக்குப் புரியவச்சாத்தான் உங்களோட மற்ற கவிதைகளின் பக்கம் தலையை வச்சுப் படுப்பேன் என்று உறுதிகூறி முடிக்கிறேன் :))

பின் தொடர்பவர்கள்